அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி:

அருவமும் உருவமாகி அநாதியாய்ப்
பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய’

வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன்.

ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார்.

சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் என ஸ்கந்தர் உருவானார். உலகில் உள்ள சகல ஜீவராசிகளும் தாயிடம் இருந்து உருவாக, முருகன் ஒருவரே தந்தையின் மூலம் உருவானார்.