பாலும் தேனும் பாகும் பருப்பும் | Palum Thenum Vinayagar Song Lyrics
Palum Thenum Vinayagar Song Lyrics in Tamil from Pillayar Songs. Palum Thenum Vinayagar Song Lyrics for Vinayagar Chaturthi.
விநாயகர் பாடல்கள் | Vinayakar Songs
பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் தருவேன்
பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் தருவேன்
உன் கோயில் வருவேன் பாடல் புனைவேன்
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
முக்கனி அப்பம் அவலோடு பொறியும்
முதல்வா உனக்கே நான் படைப்பேன்
முக்கனி அப்பம் அவலோடு பொறியும்
முதல்வா உனக்கே நான் படைப்பேன்
கற்பக தளிரே அற்புத கனியே
கல்வியை அருள்வாய் கஜமுகனே
கல்வியை அருள்வாய் கஜமுகனே
பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் தருவேன்
உன் கோயில் வருவேன் பாடல் புனைவேன்
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
பேழை வயிறும் பிறைபோல் கூடும்
யானை முகமும் உடையவனே
உன் பாத சிலம்பின் நாதம் கொண்டு
வேதம் பயில்வோம் வித்தகனே
வேதம் பயில்வோம் வித்தகனே
பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் தருவேன்
உன் கோயில் வருவேன் பாடல் புனைவேன்
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
அன்னை பிதாவே முன்னறி தெய்வம்
அறிந்திட செய்தாய் அரும்பொருளே
அன்னை பிதாவே முன்னறி தெய்வம்
அறிந்திட செய்தாய் அரும்பொருளே
உன் ஞான பழத்தை நாங்கள் புசிக்க
தானம் தருவாய் ஐங்கரனே
தானம் தருவாய் ஐங்கரனே
பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாலும் கலந்து நான் தருவேன்
உன் கோயில் வருவேன் பாடல் புனைவேன்
குறைகளை தீர்ப்பாய் கணபதியே
குறைகளை தீர்ப்பாய் கணபதியே