வருவாய் கணபதியே | Varuvai Varuvai Ganapathiye Lyrics

வருவாய் கணபதியே | Varuvai Varuvai Ganapathiye Lyrics

Varuvai Varuvai Ganapathiye Lyrics in Tamil from Vinayagar Songs. Varuvai Varuvai Ganapathiye Tamil Lyrics for Vinayagar Chathurthi.

வருவாய் வருவாய் கணபதியே
வளமே தருவாய் குணநிதியே
வருவாய் வருவாய் கணபதியே
வளமே தருவாய் குணநிதியே

இருவினை தன்னை நீக்கிடுவாய்
இடர்களை போக்கி நலம் தருவாய்
இருவினை தன்னை நீக்கிடுவாய்
இடர்களை போக்கி நலம் தருவாய்

வருவாய் வருவாய் கணபதியே
வளமே தருவாய் குணநிதியே

அகமும் புறமும் இருப்பவனே
அடியவர் துயர் தன்னை தீர்ப்பவனே
அகமும் புறமும் இருப்பவனே
அடியவர் துயர் தன்னை தீர்ப்பவனே

மங்கள நாயக மாணவ சேவித்த
மலர்பதம் வருவாய் வரம் தருவாய்
மங்கள நாயக மாணவ சேவித்த
மலர்பதம் வருவாய் வரம் தருவாய்

வருவாய் வருவாய் கணபதியே
வளமே தருவாய் குணநிதியே

சக்தியின் மகனாம் ஐங்கரனே
சஞ்சலம் தீர்த்திடும் சங்கரன் செய்
சக்தியின் மகனாம் ஐங்கரனே
சஞ்சலம் தீர்த்திடும் சங்கரன் செய்

வித்தகன் நீயே விமலனும் நீயே
வெற்றியை தந்திட வந்திடுவாய்
வித்தகன் நீயே விமலனும் நீயே
வெற்றியை தந்திட வந்திடுவாய்
வெற்றியை தந்திட வந்திடுவாய்

வருவாய் வருவாய் கணபதியே
வளமே தருவாய் குணநிதியே
வருவாய் வருவாய் கணபதியே
வளமே தருவாய் குணநிதியே
வளமே தருவாய் குணநிதியே

For More Vinayagar Songs Click on the below Links.

விநாயகர் பாடல்கள் | Vinayakar Songs

Vinayagar Songs