உமையவள் பாமாலை
உமையவள் பாமாலை இயற்றியவர் அமரர் அருட்கவி கு.செ.இராமசாமி ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்! காப்பு அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்ஆன எம் ஞான தேவா!அறுகுடன் தும்பையும் ஆத்தியும் கொன்றையும்அணிசெய்யும் அழகு மார்பா எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்(சு)இற்றிடச் செய்த வீராஇலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்எழுதிடும் கவிதை நேசா! தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவேசந்தடை கொள்ளும் பாதா!சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவேதண்ணளி …