Category «Devotional Songs Lyrics»

Navarathri Namavali – நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. துர்க்கா தேவி ஓம் துர்க்காயை நம ஓம் மகா காள்யை நம ஓம் மங்களாயை நம ஓம் அம்பிகாயை நம ஓம் ஈஸ்வர்யை நம ஓம் சிவாயை நம ஓம் க்ஷமாயை நம ஓம் கௌமார்யை நம ஓம் உமாயை நம ஓம் மகாகௌர்யை நம ஓம் …

Navaratri Songs – Karunai Deivame Karpagame

கருணை தெய்வமே கற்பகமே காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை) உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை) ஆனந்த வாழ்வே அளித்திடல் வேண்டும் அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

Manikka Venaiyenthum Kalaivani Navarathri Songs

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாடவந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ – இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க) நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் – எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே – என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே …

Sri Chakra Raja Simmasa – Navarathri Songs

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி (ஸ்ரீ சக்ர) ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஸ்ரீ சக்ர) பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் உலக முழுதும்என தகமுறக் காணவும் ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ சக்ர) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய் நிழலெனத் …

Jagath Janani Navarathri Songs

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்) சுக *ஸ்வரூபிணி மதுர வாணி சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்) பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத *ஸ்வரூபிணி (ஜகத்)

Devi Neeye Thunai – Navarathri Songs

தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி) தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி) மலையத்வஜன் மாதவமே – காஞ்சன மாலை புதல்வி மஹாராக்னி அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

Navarathri Pooja Songs in Tamil Lyrics

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் கதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலே சங்கரி ஜகதம்மா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை …

Navarathri Golu song lyrics in Tamil

நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த திருமளியே – ள பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்)

Navarathri Songs in Tamil

நானொரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவியெடுத்து திண்டாடியது போதாதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு) அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு)