பம்பா கணபதி அன்பின் அதிபதி
நன்மை அருள்கின்றாய்
அய்யன் மலை வரும் மாந்தரின்
இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய்
சாமி சோதரானாகின்றாய்-துயரினை
நீக்கியே காக்கின்றாய்
தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய்
கடும் பக்தி விரதத்தால் அவையாகும்.
அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற
அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு
பூப்போல கைகளும் வணங்கி நிற்கும்
த்ரேதா யுகம் கண்ட அவதார மாமன்னன்
சீதாபதி ராமன் இருக்கின்றான்
அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி
பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான்
என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்