சரங்குத்தி ஆல்பார்த்து உடைபட்ட மனதோடு
சபரிமலையில் தவிக்கிறாளம்மா
மஞ்சள்பூசி மஞ்சளோடு மஞ்சளாகி
மஞ்சமாதா என்ற பெயரை பெற்றாளம்மா
அம்மா மாளிகைப் புரத்தம்மா (சரங்குத்தி)
காலமஹாரிஷி தன் மகளாக
லீலா வென்ற உன் பெயருடன் அவதரித்தாய்
மத வெறியால் சிருங்கார சிலையாட
தக்க சாபம் பெற்று நீ மகிஷியானாய்
(சரங்குத்தி)
மகிஷியே வெளிதீத்து வதம் செய்ததால்
மணிகண்ட பெருமானை துதித்து நின்றாய்
பகவானை தரிசித்து அருள் பெற்றதால்
மகிஷி தன் நிலை மாறி மஞ்சமாதாவானாய் (சரங்குத்தி)