திருப்புகழ் பாடல் 332 – காஞ்சீபுரம் : சுத்தச் சித்த | Thiruppugazh Song 332
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
பாடல்
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
சுத்தப் பட்டிட் – டமுறாதே
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
சொற்குற் றத்துத் – துறைநாடி
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
றொத்துக் கித்திப் – பிணிமாதர்
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
பிற்பட் டிட்டுத் – தளர்வேனோ
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
தத்திக் கத்துப் – பலமீவாய்
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
தைக்குச் செச்சைத் – தொடைசூழ்வாய்
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
கைத்தச் சத்திப் – படையேவுங்
கற்புச் சத்திப்ட பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !