திருப்புத்தூர் கருப்பண்ணன் | Thiruputhur Karuppannan Song
சேவைகள் செய்வோரை சீர்சிறக்க வைத்திடும்
சிங்காரமான கருப்பன்
தேவைமாநகர் வாழும் தொண்டர்கள் தவறாது
தெண்டனிட வந்த கருப்பன்
அகன்றபெரு நெற்றியும் அரிவாளும் கையுமாய்
ஆளவே வந்த எங்கள்
அழகான திருப்புத்தூர் கருப்பண்ண சாமியை
அருகிலே வந்து பணிவீர்
பிள்ளைவரம் வேண்டுவோர் பெரும்பண் தேடுவோர்
பெற்றிட இங்கு வாரீர்
எல்லைக்குக் காவலாய் ஏவலுக் கெதிரியாய்
இருப்பவனை இங்கு பாரீர்
தள்ளாடி ஓய்ந்தபின் தாத்தாவாய் ஆனபின்
தரிசிக்க வாய்ப்பு மில்லை
முள்ளான வாழ்விலே நன்றாக வாழவே
முடியும்வரை வணங்கி வருவோம்.