திருப்புகழ் பாடல் 336 | Thiruppugazh Song 336

திருப்புகழ் பாடல் 336 – காஞ்சீபுரம் : அயிலப்புக் கயலப்பு | Thiruppugazh Song 336

தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
தனனத்தத் தனனத்தத் – தனதான

பாடல்

அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
கணுரத்தைக் கனவெற்புத் – தனமேகம்

அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
திளகிக்கற் புளநெக்குத் – தடுமாறித்

துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
தொடியர்க்கிப் படியெய்த்துச் – சுழலாதே

சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
தொழுசெச்சைக் கழல்பற்றிப் – பணிவேனோ

புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
புனமுத்தைப் புணர்சித்ரப் – புயவீரா

புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
புகல்பொற்குக் குடவெற்றிக் – கொடியோனே

கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
கரணிச்சித் தருள்கச்சிப் – பதியோனே

கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
பொருசத்திக் கரசொக்கப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !