திருப்புகழ் பாடல் 337 | Thiruppugazh Song 337

திருப்புகழ் பாடல் 337 – காஞ்சீபுரம் : கச்சிட்டணி | Thiruppugazh Song 337

தத்தத் தனதன தத்தத் தனதன
தத்தத் தனதன – தனதான

பாடல்

கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
மச்சக் கொடிமதன் – மலராலுங்

கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
அச்சப் படவெழு – மதனாலும்

பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
சொச்சத் தரமல – இனிதான

பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
செச்சைத் தொடையது – தரவேணும்

பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
கச்சிப் பதிதனி – லுறைவோனே

பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
உற்றுப் பொரவல – கதிர்வேலா

இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
மெச்சித் தழுவிய – திருமார்பா

எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
வெட்டித் துணிசெய்த – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !