திருப்புகழ் பாடல் 340 | Thiruppugazh Song 340

திருப்புகழ் பாடல் 340 – காஞ்சீபுரம் : கலகலென | Thiruppugazh Song 340

தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன
தனதன தத்தத் தாந்த தானன – தனதான

பாடல்

கலகலெ னப்பொற் சேந்த நூபுர
பரிபுர மொத்தித் தாந்த னாமென
கரமல ரச்சிற் றாந்தொ மாடிய – பொறியார்பைங்

கடிதட முற்றுக் காந்த ளாமென
இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு – வடமாடச்

சலசல சச்சச் சேங்கை பூண்வளை
பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி – சுழலாடத்

தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய – ருறவாமோ

திலதமு கப்பொற் காந்தி மாதுமை
யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி – சிவகாமி

திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
குமரிசு கத்தைப் பூண்ட காரணி
சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை – யருள்பாலா

அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர – முடையோனே

அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
விபுதகு றத்திக் காண்ட வாதின
மழகுசி றக்கக் காஞ்சி மேவிய – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !