திருப்புகழ் பாடல் 342 – காஞ்சீபுரம் : கோவைச் சுத்த | Thiruppugazh Song 342
தானத் தத்தத் தத்தன தத்தத் – தனதான
பாடல்
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் – கொடியார்தங்
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் – தனமேவிப்
பாவத் துக்குத் தக்கவை பற்றித் – திரியாதே
பாடப் பத்திச் சித்த மெனக்குத் – தரவேணும்
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் – பொரும்வேலா
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் – கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் – பதியோனே
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !