திருப்புகழ் பாடல் 345 | Thiruppugazh Song 345

திருப்புகழ் பாடல் 345 – காஞ்சீபுரம் : படிறொழுக்கம் | Thiruppugazh Song 345

ராகம் – சாரங்கா
தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)

தகிடதகதிமி – 3 1/2
தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன – தனதான

பாடல்

படிறொ ழுக்கமு மடம னத்துள
படிப ரித்துட – னொடிபேசும்

பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
பலகொ டுத்தற – உயிர்வாடா

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
விதன முற்றிட – மிகவாழும்

விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத – மருள்வாயே

கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
குமர கச்சியி – லமர்வோனே

குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
குவளை முற்றணி – திருமார்பா

பொடிப டப்பட நெடிய விற்கொடு
புரமெ ரித்தவர் – குருநாதா

பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
பொருது ழக்கிய – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !