திருப்புகழ் பாடல் 350 | Thiruppugazh Song 350

திருப்புகழ் பாடல் 350 – காஞ்சீபுரம் : வம்ப றாச்சில | Thiruppugazh Song 350

ராகம் – ஆபோகி
தாளம் – ஆதி – 2 களை (எடுப்பு 1/4 இடம்)

தந்த தாத்தன தன்ன தனந்தன
தந்தத் தத்தத் – தனதானா

பாடல்

வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
யத்துக் கத்துத் – திரையாளர்

வன்க லாத்திரள் தன்னை யகன்றும
னத்திற் பற்றற் – றருளாலே

தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
கிப்பொற் பத்மக் – கழல்சேர்வார்

தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
வைக்கச் சற்றுக் – கருதாதோ

வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
வெற்புப் பொட்டுப் – படமாசூர்

வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
வெட்சிச் சித்ரத் – திருமார்பா

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
கைக்குக் கற்புத் – தவறாதே

கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !