திருப்புகழ் பாடல் 355 | Thiruppugazh Song 355

திருப்புகழ் பாடல் 355 – திருவானைக்காவல்: அனித்தமான | Thiruppugazh Song 355

ராகம் – பூபாளம்
தாளம் – சதுஸ்ர ஏகம் (திஸ்ர நடை) (6) (எடுப்பு – அதீதம்)

தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான – தனதான

பாடல்

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத – வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் – மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ – னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி – யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத – மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர – வயலூரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய – மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர் – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !