திருப்புகழ் பாடல் 361 | Thiruppugazh Song 361

திருப்புகழ் பாடல் 361 – திருவானைக்காவல்: காவிப்பூவை | Thiruppugazh Song 361

தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன – தனதான

பாடல்

காவிப் பூவை யேவை யிகல்கவன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன – இருதோடார்

காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை – சிதையாத

பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை – யினிமேலன்

பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள – நினையாதோ

கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் – விளையாடக்

கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த – வடிவேலா

ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி – லுறைவோனே

ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய – பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !