திருப்புகழ் பாடல் 364 | Thiruppugazh Song 364

திருப்புகழ் பாடல் 364 – திருவானைக்காவல்: நிறைந்த துப்பிதழ் | Thiruppugazh Song 364

தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன – தந்ததான

பாடல்

நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென – நெஞ்சின்மேலே

நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென – நைந்துசீவன்

குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில – மைந்துநாபி

குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய – மென்றுசேர்வேன்

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மானங்க ளித்திட லாமோது ரோகித – முன்புவாலி

வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி
வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ – மென்றுபேசி

அறந்த ழைத்துநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் – மைந்தனான

அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் – தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !