மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு
பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி
வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி)
சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து
அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது
உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி)
கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க
மயிலுடன் உலவிடும் ஆறு வீடு
உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி வீடு
மனந்தனில் தொண்டர்க்கு கோடி வீடு (மணிமுடி)
கணபதி தலை வாசல் கந்தனுக்கு மலைவாசல்
துணைவியர் இருபுறம் உன்னைச் சேர
உடன் தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற
தொண்டர்கள் பல்லாண்டு வாழ்த்து கூற (மணிமுடி)