Kanchi Kamatchi – Navarathri Songs

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி …

Mangala Roobini Navarathri Song

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …

Navarathri Slogam – நவராத்திரி ஸ்லோகம்

நவராத்திரி ஸ்லோகம் கிராõஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்! துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!! பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க …

Navarathri Namavali – நவராத்திரி நாமாவளி

நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. துர்க்கா தேவி ஓம் துர்க்காயை நம ஓம் மகா காள்யை நம ஓம் மங்களாயை நம ஓம் அம்பிகாயை நம ஓம் ஈஸ்வர்யை நம ஓம் சிவாயை நம ஓம் க்ஷமாயை நம ஓம் கௌமார்யை நம ஓம் உமாயை நம ஓம் மகாகௌர்யை நம ஓம் …

Navaratri Songs – Karunai Deivame Karpagame

கருணை தெய்வமே கற்பகமே காண வேண்டும் உன் தன் பொற்பதமே (என் கருணை) உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உனையன்றி வேறே யாரோ என் தாய் (கருணை) ஆனந்த வாழ்வே அளித்திடல் வேண்டும் அன்னையே என் மேல் இரங்கிடல் வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

Manikka Venaiyenthum Kalaivani Navarathri Songs

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாடவந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ – இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க) நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் – எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே – என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே …

Sri Chakra Raja Simmasa – Navarathri Songs

ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸ னேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி (ஸ்ரீ சக்ர) ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஸ்ரீ சக்ர) பலவிதமா யுன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடுமன்பர் பதமலர் சூடவும் உலக முழுதும்என தகமுறக் காணவும் ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ சக்ர) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டிவைத்தாய் நிழலெனத் …

Jagath Janani Navarathri Songs

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்) சுக *ஸ்வரூபிணி மதுர வாணி சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்) பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத *ஸ்வரூபிணி (ஜகத்)

Devi Neeye Thunai – Navarathri Songs

தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி) தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி) மலையத்வஜன் மாதவமே – காஞ்சன மாலை புதல்வி மஹாராக்னி அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)