ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை பாடல் | Kunguma Archanai Paadal

குங்கும அர்ச்சனை பாடல்
Aadi Pooram Amman Song for Kunguma Archanai – Kunguma Archanai song lyrics in tamil

Click Here for Kunguma Archanai Benefits in Tamil | அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்

ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…

சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்
தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்
ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…

ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…

பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
பலஜன்ம பாவத்தை போக்கு பவளாம்
கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பவளாம்

ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…

தீராத வினைகளை தீர்ப்பவளாம் தேவி
திருவடி சரணம் சரணம் அம்மா
பவபய ஹாரிணி அம்பா பவானியே
துக்க நிவாரிணி துர்க்கே ஜெய ஜெய

ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…

காலபி நாகினி காளி ஜெய ஜெய
சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணவதி சரணம் சரணம்

ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…

தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…

உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்

ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம்…
ஓம் சக்தி ஓம்.. ஓம் சக்தி ஓம்…