Abirami Andhathi Lyrics in Tamil – Songs 61 to 70

உண்மை உணர்வு உண்டாக

நாயேனையும் இங்கொருபொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே. 61

பயங்கள் விலக

தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடைக்
கொங்கைக் குறும்பைப் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே. 62

நல்லறிவு உண்டாக

தேறும் படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே. 63

இறை பக்தி பெருக

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே. 64

மழலை செல்வம் பெற

ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே. 65

இசைபாடும் ஆற்றல் பெற

வல்லபம் ஒன்றறியேன் சிறியேன்நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் விற்றிருப்பாய் வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே. 66

பயம் நீங்க

தோத்திரம் செய்து தொழுதுமின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரை போதும் மனத்தில்லை யாதுஅவர் வண்மைகுலம்
கோத்திரம் கல்வி குணம்குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்குழலாநிற்பர் பார்எங்குமே.67

செல்வங்கள் பெருக

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊரொளி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.68

சகல செளபாக்கியங்களும் பெருகிட

தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.69

கலைகளில் தேர்ச்சி பெற

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம் பாடடவியல்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாடிதன் பேரழகே.70