Tag «அபிராமி அந்தாதி»

Sivasakthi Andhathi

துன்பங்களை போக்கும் சிவசக்தி அந்தாதி நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை அயனும் அலைகடல் அரங்கனும் …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 91 to 100

அரசாங்க அனுகுலம் பெற மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்னனையாளைப் புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழும் அவர்க்குப் பல்லியம் ஆர்த்தொழ வெண்பகடு ஊரும் பதம் தருமே.91 மனப்பக்குவம் உண்டாக பதத்தே உருகிநின் பாதத்திலே மனம் பற்றி உன்றன் இத்ததே ஒழுக அடிமைகொண்டாய் இனி யான்ஒருவர் மதத்தே மதிமயங் கேன் அவர் போனவழியும் சொல்லேன் முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.92 உள்ளத்தில் நிறைவு உண்டாக நகையே இக்திந்த ஞாலம்எல்லாம் பெற்ற நாயகிக்கு …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 81 to 90

நன்னடத்தை உண்டாக அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு இனங்கேன்எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரோடும் இனங்கேன் அறிவொன்றிலேன் என் கண் நீவைத்த பேரொளியே.81 மனம் ஒருமைப்பட அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும் களியாகி அந்த கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய்விடின் எங்ங்னேமறப்பேன்நின் விரகினையே.82 பலர்க்குத் தலைமை ஏற்க விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 71 to 80

மனக்குறை நீங்க அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பணி மாமதியின் குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொரும்பிருக்க இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே.71 பிறவி பிணிதீர என்குறை தீர நின்றேத்துகின்றேன் இனி யான் பிரிக்கின் நின்குரையே அன்றி யார் குறை கான் இருநீள் விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீர எங்கோன்சடைமேல் வைத்த தாமரையே. 72 கர்ப்பம் தரித்திட தாமம் கடம்பு படைபஞ்ச பானம் தனுக்கரும்பு …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 61 to 70

உண்மை உணர்வு உண்டாக நாயேனையும் இங்கொருபொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன் தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே. 61 பயங்கள் விலக தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத வெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடைக் கொங்கைக் குறும்பைப் குறியிட்ட நாயகி கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே. 62 நல்லறிவு உண்டாக தேறும் படி சில …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 51 to 60

வாழ்வில் சிறக்க அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள் முரண் அன்றழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே. 51 செல்வம் உண்டாக வையகம் துரகம் மதகிரி மாமகுடம் சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே. 52 தவம் கைகூடிட சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 41 to 50

இறை அடியார் நட்புகிட்ட புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி எங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே. 41 இவ்வுலகம் நமக்கு உதவிட இடங்கொண்டு விம்மி இணைகொண்டிறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டிறைவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப் பரிபுரையே. 42 தீமையெல்லாம் நீங்க பரிபுரச் சீறடி …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 31 to 40

மறுமையில் இன்பம் உண்டாக உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 31 அம்பிகை ஆசி பெற்றிட ஆசைக் கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின்பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே. 32 அன்னையின் …

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 21 to 30

இறைவன் பூஜை செய்யாத பாவம் நீங்க மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடை ஆளுடையாள் பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே. 21 பிறவா வரம் பெற கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப் படியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே அடியேன் இறந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே. 22 மனச்சஞ்சலம் …