மனக்குறை நீங்க
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பணி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொரும்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே.71
பிறவி பிணிதீர
என்குறை தீர நின்றேத்துகின்றேன் இனி யான் பிரிக்கின்
நின்குரையே அன்றி யார் குறை கான் இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர எங்கோன்சடைமேல் வைத்த தாமரையே. 72
கர்ப்பம் தரித்திட
தாமம் கடம்பு படைபஞ்ச பானம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதேமகென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கோளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே.73
செய்தொழில் மேன்மை பெற
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே. 74
விதியை வெல்ல
தங்குவர் கற்பகத் தாருவின் நிழலில் தாயர்இன்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் அழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கியவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.75
தனக்குரிய பொருளை பெற்றிட
குறித்தேன் மனதில்நின் கோலம்எல்லாம்நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு கூற்றைமெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பான பயிரவியே.76
பகை அச்சம் நீங்க
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயர்ஆவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புரவே.77
செளபாக்கியங்கள் உண்டாக
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியன் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே.78
நல்லோர் நட்பு கிட்ட
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்கப்
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே. 79
மனமகிழ்ச்சி நிலைக்க
கூட்டிவா என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிகின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.80