Abirami Andhathi Lyrics in Tamil – Songs 81 to 90

நன்னடத்தை உண்டாக

அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இனங்கேன்எனதுன தென்றிருப்பார் சிலர் யாவரோடும்
இனங்கேன் அறிவொன்றிலேன் என் கண் நீவைத்த பேரொளியே.81

மனம் ஒருமைப்பட

அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்த கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய்விடின் எங்ங்னேமறப்பேன்நின் விரகினையே.82

பலர்க்குத் தலைமை ஏற்க

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே. 83

இக்கட்டுகள் நீங்க

உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மானிடையாளை இங்கென்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே. 84

அல்லல் எல்லாம் அகல

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வாண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் ஏன் அல்லல்எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங் குமமுலையும் முலைமேல் முத்து மாலையுமே. 85

அச்சம் விலக

மால்அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையும் கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே. 86

செயற்கரிய செய்து புகழ்பெற

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம்எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம்கொண்டாளும் பராபரையே. 87

அம்பிகையின் அருள் கிடைக்க

பரம் என்றுனை அடைந்தேன்தமியேனும் உன் பத்தருக்குள்
தரம்அன்றிவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம்அன்று எறியப் பொருப்புவில் வாங்கியபோதில்அயன்
சிரம்ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே. 88

யோகசித்தி பெற

சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடுயிர் உறவற்றரிவு
மறக்கும் பொழுது என்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே. 89

தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க

வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லை விண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.90