கணபதி மந்திரம்
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!
அம்மன் காயத்திரி மந்திரங்கள்!
(சரஸ்வதி, கலைவாணி, அன்னபூரணி, மாரியம்மன், சரதா தேவி,
சந்தோஷிமாதா, மகிஷாசுரமர்த்தினி, மகாலட்சுமி,
பாலா த்ரிபுரசுந்தரி, மீனாட்சி, ராதா, ஸாகம்பரி, காமதேனு)
கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ
”ஓம் வாக்தேவயை ச வித்மஹே
விரிஞ்சி பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்”
நாவின் ஒலிக்கு மூலகாரணமானவளே,
நான்முகனின் நாயகியே, தினமும் உன்னை
பணிகின்றேன் சரஸ்வதி தேவியே சரணம்.
சங்கீத ஞானம் பெற ஸ்ரீ கலைவாணி காயத்ரீ
”ஓம் நாத ரூபிண்யை ச வித்மஹே
வீணா தரணீ ச தீமஹி
தந்நோ கலாவாணி ப்ரசோதயாத்”
வேதங்களின் வடிவான வாணியே,
வீணையை வைத்திருப்பவளே,
கலைமகளே சரணம்.)
இல்லத்தில் அன்னம் நிறைந்திருக்க ஸ்ரீ அன்னபூரணி காயத்ரீ
”ஓம் பகவத்யை காசிவாசின்யை ச வித்மஹே
மாஹேச்வர்யை ச தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்”
பஞ்சமிலா வாழ்வுதரும் பகவதியே, உலக உயிர்களுக்கு
அன்னமளிக்கும் மகேசுவரியே, காசி
அன்னபூரணி தாயே அருளவாய்.
வெம்மை நோய் பாதிப்பு குறைய ஸ்ரீ மாரியம்மன் காயத்ரீ
”ஓம் மங்கள காரணீ ச வித்மஹே
மனோகர ரூபிணீ ச தீமஹி
தந்நோ மாரி ப்ரசோதயாத்”
மங்கள காரணியே, மகிழ்வருளும்
அன்னையே, மண்ணுலக உயிர்களைக்
காக்கும் மாரித்தாயே போற்றி.
கலைகளில் மேன்மை பெற்றிட ஸ்ரீ சரதா தேவி காயத்ரீ
”ஓம் ஞான ரூபாய ச வித்மஹே
புத்தி தாராயை ச தீமஹி
தந்நோ சாரதா ப்ரசோதயாத்”
ஞானத்தின் வடிவமே, அறிவான அறுபத்தி
நான்கு கலைகளையும் அறிந்தவளே
உன்பதம் பணிந்தேன் சாரதையே சரணம்.
வாரிசு வாழ்விற்கு நன்மை ஏற்பட ஸ்ரீ சந்தோஷிமாதா காயத்ரீ
”ஓம் கணேச புத்ரீ ச வித்மஹே
சுப லாப சோதரீ ச தீமஹி
தந்நோ சந்தோஷி ப்ரசோதயாத்”
தும்பிக்கையான் புதல்வியே, சுபன் லாபன்
தமக்கையே நம்பிக்கையுடன் தொழுதேன்
நலம் புரிவாய் சந்தோஷி போற்றி.
துயரம் நீங்கி செல்வம் பெருக ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி காயத்ரீ
’ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே,
விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி
தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்”
மகிஷனை அழித்த விஷ்ணுவின்
பத்தினியே வறுமை துயரம்
துடைப்பாய், வரமருள் துர்க்கையே.
வறுமை நீங்கி செல்வம் பெருக ஸ்ரீ மகாலட்சுமி காயத்ரீ
’ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே,
விஷ்ணு பத்னியை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்”
மகாதேவியே, லட்சுமியே, விஷ்ணுவின்
பத்தினியே உன் பார்வை
என்மீது விழட்டும், வரமருள் தாயே.
’ஓம் கமலவாஸின்யை ச வித்மஹே,
பத்ம லோசன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்”
தாமரை மலர்மீது அமர் தாயே, உன்
பதும விழி என்னையும் பார்க்கட்டும்,
வறுமை விலக வரமருள் தாயே.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரி காயத்ரீ
”ஓம் பால ரூபாயை ச வித்மஹே
ஸதாநவ வர்ஷாயை தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்”
மழலை வடிவான மாதாவே, அழல்கண்
அரனின் தேவியே, கருணை மழை
பொழியும் பலா திரிபுரசுந்தரியே போற்றி.
வாழ்வில் உயர்வுகள் பெற்றிட ஸ்ரீ மீனாட்சி காயத்ரீ
”ஓம் த்ரீநேத்ரிணீ ச வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ மீனாக்ஷி ப்ரசோதயாத்”
முக்கண்ணனின் பத்தினியே,
உன் அருளால் நாளும் மண்ணுயிர்
காக்கும் மீனாட்சியே போற்றி.
பிடித்த மணவாளன் அமைந்திட ஸ்ரீ ராதா காயத்ரீ
”ஓம் க்ருஷ்ண மோஹின்யை ச வித்மஹே,
விஸ்வ ஜனன்யை ச தீமஹி
தந்நோ க்ரிஷ்ணப்ரேமி ப்ரசோதயாத்’
ஸ்ரீ கிருஷ்ணன் மேல் மாறா அன்பு
கொண்டவளே, நல்லோர்க்கு நல்வாழ்வு
தந்திடுபவளே, க்ருஷ்ண ப்ரியையே போற்றி.
”ஓம் கோபால மோஹின்யை ச வித்மஹே,
கிருஷ்ணாங்கார்த்த சரீரிண்யை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்’
கோபாலன் மேல் மாறா அன்பு கொண்டவளே,
சரீரம் உள்ளவரை க்ருஷ்ணனை மறவாத ராதையே
மாபாதகம் போக்கும் மாதவத்தோய் போற்றி.
பயிர்கள் செழித்து விளைச்சல் பெருகிட ஸ்ரீ ஸாகம்பரி காயத்ரீ
”ஓம் கால ரூபிண்யை ச வித்மஹே,
தான்ய பல வ்ருத்திகாயை ச தீமஹி
தந்நோ ஸாகம்பரி ப்ரசோதயாத்’
உரிய காலத்தில் தானியங்களை விருத்தி செய்பவளே,
கனிவோடு காத்து அருள் புரிந்து தானியங்கள் செழித்து
பஞ்சமில்லா வாழ்வு அருள்வாய் ஸாகம்பரியே.
எண்ணங்கள் நிறைவேற ஸ்ரீ காமதேனு காயத்ரீ
”ஓம் ஸூரப்யை ச வித்மஹே
மனோ ரஞ்சிதாய தீமஹி
தந்நோ தேனு ப்ரசோதயாத்”
கோரிக்கைகள் பலித்திட அருள் புரிந்து நேர்
வழியில் வாழ பாரினில் வழிபடுவோர்க்கு
அருளும் கோமாதாவே போற்றி.