ஆதித்ய ஹ்ருதயம் – 26-31
ஆதித்ய ஹ்ருதயம் (26 முதல் 31 வரை)
பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி
தேவதேவம் – தேவர்களுக்கும் தெய்வமானவனை
ஜகத்பதிம் – உலகத்தை உடையவனை
பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ – ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.
ஏதத் – இந்த ஸ்தோத்திரத்தை
த்ரிகுணிதம் ஜப்த்வா – மும்முறை ஜபித்து
யுத்தேஷு – போரில்
விஜயிஷ்யஸி – வெற்றி பெறுவாய்
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம ச யதா கதம்
அஸ்மின் க்ஷணே – இந்த நொடியிலேயே
மஹாபாஹோ – பெரும் தோள்வலிமை உடையவனே
ராவணம் த்வம் வதிஷ்யஸி – இராவணனை நீ வதைப்பாய்
ஏவம் உக்த்வா – இப்படி சொல்லிவிட்டு
ததா அகஸ்த்யோ – அங்கிருந்த அகத்தியர்
ஜகாம ச யதா கதம் – எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்
ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத் ததா
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்
ஏதச் ச்ருத்வா – இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)
மஹாதேஜா – பெரும் வலிமையுள்ளவனும்
தாரயாமாஸ – நோக்கத்தில் உறுதியுள்ளவனும்
சுப்ரீதோ – மிகவும் மகிழ்ந்தவனும்
ராகவ: ப்ரயதாத்மவாந் – முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்
நஷ்ட சோகோ பவத் ததா – அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்சம் அவாப்தவாந்
த்ரிர் ஆசம்ய சுசிர்பூத்வா தநுர் ஆதாய வீர்யவாந்
த்ரிர் ஆசம்ய – மும்முறை ஆசமனீயம் செய்து
சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்
தநுர் ஆதாய – வில்லை ஏந்தியவன்
வீர்யவாந் – வீரத்தில் சிறந்தவன்
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து – ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து
பரம் ஹர்சம் அவாப்தவாந் – மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்
ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் – போர் செய்யும் நோக்கத்துடன் வரும்
ராவணம் ப்ரேக்ஷ்ய – இராவணனைப் பார்த்து
ஸர்வ யத்னேன மஹதா – மேலான எல்லா முயற்சிகளுடனும்
வதே தஸ்ய த்ருதோபவத் – அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).
அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம்
முதிதமநா பரமம் ப்ரஹ்ருஷ்யமான:
நிசிசரபதி சம்க்ஷயம் விதித்வா
சுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி