பிரச்சனை, தொல்லைகளை போக்கும் பைரவர் ஸ்லோகம்
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.