Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs
அம்பிகையை கொண்டாடுவோம்
அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி
அம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை)
ஆலய திருநீரை அணிந்திடுவோம்
அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்
அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரி
அம்பிகையை கொண்டாடுவோம்
சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மா
குங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மா
புன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்
அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை)
தில்லையாடும் காளியம்மா காளியம்மா
தில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மா
கரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மா
எங்கள் அன்பு மாரியம்மா தேவியம்மா (அம்பிகையை)