Aththa Karumari – Lord Mariyamman Songs

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்

நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி – உன்னை
நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி
மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயிநமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி – கண்
இமை போல காத்திடுவாள் மகமாயி
உமையவள் அவளே இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே – எங்கள் சமயபுரத்தாள் அவளே!
இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி
தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி
முந்தை வினைகளைக் களைந்தெறிவாள் தாய் மயிலையிலே, முண்டகக்கன்னி – கோலவிழி பத்திரகாளி
வேண்டும் வரம் தருவாள் என் தாய்….வேற்காட்டுக் கருமாரி

ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்
பாத்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி

நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்தவினை தீர்த்திடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா
தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா

மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் – அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் இட்டோம் – அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாரும் அம்மா – அம்மா
தூயவளே எந்தன் தாயீ மாரியம்மா!

பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் – உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் – உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே!
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் – மற்ற அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா! காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!

இந்தச் சின்னவனின் குரல்கேட்டு முகம் திருப்பு – அம்மா
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு! – அம்மா
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் – அம்மா
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் – அம்மா
எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே கும்பிட வேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆக வேண்டும்

சமயபுரம்

மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மா மதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா

விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்திரகாளியம்மா
வீரபாண்டியிலே கெளமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா

சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

மண்ணளக்கும் தாயே….
தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா

வேளாங்கண்ணி

நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொண்ணையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே – நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தா!

மண்ணளக்கும் தாயே….
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகாத்தம்மா

மண்ணளக்கும் தாயே….
சென்னையிலே மயிலையிலே அருள்மிகு தேவி முண்டகக் கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும் தாயே….
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும் தாயே….
வடநாட்டிலே காசி விசாலாக்ஷியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பி்கே மூகாம்பிகையம்மா
தங்கவயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும் தாயே….
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும் தாயே….
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா