எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்
எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள்
இயல்பான அழகு வடிவம்
இனிய முகம் தாமரை, இரு செவிகள் செந்தாழை
இறைவி நிறம் நல்ல பவளம்
கள்ளிருக்கும் ரோஜாப்பு கன்னங்கள் நெற்றியும்
கடைந்ததோர் இரண்டு கால்கள்
கைகளும் விரல்களும் கனகாம்பரம் மல்லி
கற்பகத்துப்பூவில் தோள்கள்
அங்கத் திருநடனம்
ஆடும் அம்பிகை சக்தி
இறைவனுடன் பாதி கலந்தாள்
எல்லார் மனத்திலும் நலத்திலும் குணத்திலும்
அன்பென்று தானிருந்தாள் – சக்தி
அன்பென்று தானிருந்தாள்