தியானமா இது சயனமா …
மாதவக் கொழுந்தே மானிடர் மருந்தே
ராஜ ராஜேஸ்வரியே சரணம் !
ப்ரணவஸ்வரூபிணி பிள்ளையை பாருநீ
உருகி உருகி அழைக்கும் உள்ளம்
உன்னை ஒன்று கேட்க துடிக்குதே
அம்மா…
தியானமா இது சயனமா – உன்
தயவுக்கேட்டால் மௌனமா (தியானமா)
நீலகண்டன் போல நீயும் தியானம் செய்தாயோ
நீலவண்ணன் அண்ணன் போல சயனம் கொண்டாயோ
கோவில் மணிப்போல பாடும் பணியை எனக்கு வழங்கிய தாயம்மா
தேவி உன்னை வேண்டும் போது மௌனம் ஏன் இது மாயமா
ராஜ ராஜ ஈஸ்வரீ பாகம் பிரியா பைரவி
வாலையே வனிதாமணி தியானசுந்தரி ஆதரி
தியானமா இது சயனமா – உன்
தயவுக்கேட்டால் மௌனமா …. அம்மா…
மானசீக பூஜை செய்தேன் மார்பில் வந்தே தோன்றினாய்
நாபிக்கமலம் ஓடிஆடி நாதம் பாட தூண்டினாய்
கானம் பாட ஞானதேவி கண்கள் மூடி ரசித்ததேன் ?
பாடல் வழியே பாரம் சொல்ல விழிகள் திறக்க மறுத்ததேன் ?
கீதம் கேட்கும் தேவி செவியில் சோகம் ஏறவில்லையோ ?
நானும் மனித பிறவிதானே இன்னும் தயவு இல்லையோ ?
அன்னை உமையே எந்தன் இடத்தில் பாசமா பரிகாசமா ?
மகமாயி மனசே இரங்குமா?
ராஜ ராஜ ஈஸ்வரீ பாகம் பிரியா பைரவி
வாலையே வனிதாமணி தியானசுந்தரி ஆதரி
தியானமா இது சயனமா – உன்
தயவுக்கேட்டால் மௌனமா …. அம்மா…
ஆறுமுகனை ஆரத்தழுவும் தாய்மை எங்கே போனதோ ?
ஆனைமுகனுக்கு அமுதம் ஊட்டும் அம்பாள் உனக்கென்ன ஆனதோ ?
பேசக்கூட நேரம் இன்றி ஊசிமுனையில் நின்ற நீ
வழியை அறிவாய் வருத்தம் களைவாய் ஜன கல்யாணி மாலிநீ
சாதிப்பாய் என சக்தி தந்தாய் வழியில் இத்தனை காயமா ?
சோதிப்பேன் எனச் சொல்லி சொல்லி காலம் நீட்டித்தல் நியாயமா ?
புவனமாதா களைந்திடாதா நாடகம் இன்னும் வேண்டுமா ?
இந்த மனித ஜன்மம் தாங்குமா?
ராஜ ராஜ ஈஸ்வரீ பாகம் பிரியா பைரவி
வாலையே வனிதாமணி தியானசுந்தரி ஆதரி
தியானமா இது சயனமா – உன்
தயவுக்கேட்டால் மௌனமா …. அம்மா…