அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா – Anathi Moola Porule Saranam ayyappa

 4,907 total views,  4 views today

ஹரி ஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா!
அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா!
பரம தயாளா குனாளா சரணம் ஐயப்பா!

பரந்தாமா ஜய தாரகநாமா ஐயப்பா!
பந்தள குந்தள சுந்தர சந்த்ரா ஐயப்பா!
பாண்டிய ராஜா குமாரா சரணம் ஐயப்பா!

சந்தனவர்ண சுவர்ண சரீரா ஐயப்பா!
சபரி கிரீசா ஹ்ருதய குஹேசா ஐயப்பா!
அன்னதான விஸ்தார உதாரா ஐயப்பா!

அகிலலோக சரணாகத ரக்ஷக ஐயப்பா!
என்னையும் ஏற்றருள் செய்தாய் ஐயப்பா!
ஏகயோக சஜ்ஜன குருநாதா ஐயப்பா!

பொருளுணர்ச்சின் முத்திரை காட்டிய ஐயப்பா!
புண்ணியபம்பாதீர விஹாரி ஐயப்பா!
மருவும் அகஸ்திய வாசக ரமணா ஐயப்பா!

மங்கள வாழ்வு வழங்கிட வா வா ஐயப்பா!
ஹரிஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா!
அனாதிமூலப்பொருளே சரணம் ஐயப்பா!