கானக வாசா காணவிலாசா
கண்களில் வரும் மலர் பொழிந்தேன் – என்
கண்களில் வரும் மலர் – பொழிந்தேன்
உன்கேசாதி பாதம் பணிந்தேன் (கானக)
இருவிழி செய்தது என்னென்ன புண்ணியம்
நறுமலர் மேனியில் நான்கண்ட புண்ணியம்
சிறுமனம் தினம் தினம் உன்பேரை எண்ணிடும்
வரும் துயர் போக்கிட வருவது உன்னிடம்
திருவடி துணையென தேடிய என்னிடம் (கானக)
வருவதும் போவதும் உன் கன்னிதானம்
பசியினைப் போக்கிடும் உன் அன்னதானம்
வறுமையை நீக்கிடும் அருளின் நிதானம்
அருள்மழை பொழிந்திடும் ஐயன் விதானம்
அனுதினம் அணைப்பது ஐயப்பகானம் (கானக)