Laahi Laahi – Ayyappan Songs

லாஹி லாஹி

லாஹி லாஹி இல்லல்லோ
வாவர் சாமி ஊரல்லோ
எரிமேலிப்பேட்டை வந்தல்லோ
கரும்புள்ளி செம்புள்ளியிட்டல்லோ

எரிமேலி நாங்கள் வந்திடுவோம்
பேட்டை துள்ளி ஆடிடுவோம்
வாவர் சாமி திந்தக்கதோம்
அய்யப்ப சாமி திந்தக்கதோம் (லாஹி)

மணிகண்டன் நண்பர் ஆனவரே
மாமலை மாமணி ஆனவரே
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே
அல்லாவின் இறையடி சென்றவரே

சபரிமலைக்கு சென்றிடுவோம்
வாவரின் தோழரைக் கண்டிடுவோம்
சர்க்கரை மிளகும் பெற்றிடுவோம்
சரணம் சொல்லி அழித்திடுவோம் (லாஹி)