ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக் கூடுங்கோ
ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக்கூடுங்கோ
சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ – நீங்க
சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ
ஆனந்தமே ஐயன் தரிசனமே அதைத்
கண்ணாரக் கண்டு விட்டாலோ புண்ணியமே (ஸ்வாமி மாரே)
குருசாமி திருவடியை வணங்கிட வேண்டும்
தரிசனம் கிடைக்க வரம் கேட்க வேண்டும்
எரிமேலி பேட்டைதுள்ளி ஆட்டம் போடணும் அந்தப்
பெருமானின் பேரைச் சொல்லி இன்பம் சேர்க்கணும் (ஸ்வாமி மாரே)
கங்கா நதி போன்று பம்பா நதியில்
மங்கள நீராடி மகிழ்ந்திட வேணும்
குங்குமம் சந்தனம் திரு நீறணிந்து
பம்பையில் பாட்டுப் பாடி விளக்கேத்தணும் (ஸ்வாமி மாரே)