பரம்பொருளான சிவ பெருமானை நினைத்தாலே அருள் தரும் கருணைக் கடலான சிவனை அவருடைய சக்தி வாய்ந்த மந்திரங்கள் கொண்டு மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களை இப்போது பார்க்கலாம்.
![](https://divineinfoguru.com/wp-content/uploads/2021/05/kondraiyai-tharithavane-shiva-song-lyrics.jpg)
பஞ்சாட்சர சிவ மந்திரம்:
ஓம் நமசிவாய
இந்த மந்திரத்தை தினமும் மனதில் உரு போட பரம்பொருளான சிவன் உடனிருந்து அருள் புரிவான். ஓம் நமசிவாய என்பதின் பொருள் நான் பரம்பொருளான சிவபெருமானை வழிபடுகிறேன் என்பதாகும். இம்மந்திரத்தை தினமும் 108 முறை சிவனை நினைத்து சொல்வதால் ஒருவரின் உடல் புனிதமடைந்து, சிவபெருமானின் நிறைந்த அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறும்.
ருத்ர மந்திரம்
ஓம் நமோ பகவதே ருத்ராய
இந்த மந்திரம் சிவ பெருமானின் ருத்ர வடிவத்தை மனதில் நிறுத்தி உச்சரிக்கப்பட அவரின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும்.
சிவ காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
மிக சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம். அதிலும் சிவனுக்கு உரிய இந்த காயத்ரி மந்திரம் அதீத சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும்.