முகுந்த மாலா 16 | Mukunda Mala Stotram 16 in Tamil with Meaning
முகுந்த மாலா 16
ஜிஹ்வே கீர்தய கேஶவம் முரரிபும் சேதோ ப⁴ஜ ஶ்ரீத⁴ரம்
பாணித்³வந்த்³வ ஸமர்சயாச்யுதகதா²꞉ ஶ்ரோத்ரத்³வய த்வம் ஶ்ருணு |
க்ருஷ்ணம் லோகய லோசனத்³வய ஹரேர்க³ச்சா²ங்க்⁴ரியுக்³மாலயம்
ஜிக்⁴ர க்⁴ராண முகுந்த³பாத³துலஸீம் மூர்த⁴ன் நமாதோ⁴க்ஷஜம் || 16 ||
விளக்கம்:
நாக்கே! கேசவனை துதி செய்வாயாக ஓ மனமே! முராரியை (முரனின் பகைவனை) பஜனம் செய் இரு கைகளே ஸ்ரீதனை அர்ச்சனை செய்யுங்கள். காதுகளே! நீங்கள் அச்சுதனின் கதைகளை கேளுங்கள் கண்களே! கண்ணனை பாருங்கள் கால்களே ஹரியின் ஆலயத்திற்க்கு செல்லுங்கள் மூக்கே! முகுந்தனின் பாதத்திலுள்ள துளஸியை நுகர்வாயாக தலையே விஷ்ணுவை வணங்குவாயாக.
DivineInfoGuru.com