முகுந்த மாலா 19 | Mukunda Mala Stotram 19 in Tamil with Meaning
ப்ருத்²வீரேணுரணு꞉ பயாம்ஸி கணிகா꞉ ப²ல்கு³ஸ்பு²லிங்கோ³ லகு⁴꞉
தேஜோ நிஶ்ஶ்வஸனம் மருத் தனுதரம் ரந்த்⁴ரம் ஸுஸூக்ஷ்மம் நப⁴꞉ |
க்ஷுத்³ரா ருத்³ரபிதாமஹப்ரப்⁴ருதய꞉ கீடா꞉ ஸமஸ்தா꞉ ஸுரா꞉
த்³ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூ⁴மாவதூ⁴தாவதி⁴꞉ || 19 ||
விளக்கம்:
எதுவானது பார்க்கப்பட்ட அளவில் பூமியானது சிறிய தூசாகவும் ஜலமெல்லாம் திவலைகளாகவும் தேஜஸ் என்பது சிறிய பொறி உருவிலுள்ள நெருப்பாகவும் காற்றானது சிறிய மூச்சுக் காற்றாகவும் ஆகாயம் மிகச் சிறிய துவாரமாகவும் சிவன், பிரமன் முதலான ஸகல தேவர்களும் சிறிய எறும்புகள் போன்று காணப்படுகின்றார்களே அப்படிப்பட்ட உன்னுடையதான எல்லைகடந்த மஹிமையானது வெற்றி கொள்கிறது.