முகுந்த மாலா 24 | Mukunda Mala Stotram 24 in Tamil with Meaning

முகுந்த மாலா 24 | Mukunda Mala Stotram 24 in Tamil with Meaning

வ்யாமோஹ ப்ரஶமௌஷத³ம் முனிமனோவ்ருத்தி ப்ரவ்ருத்த்யௌஷத⁴ம்
தை³த்யேந்த்³ரார்திகரௌஷத⁴ம் த்ரிபு⁴வனீ ஸஞ்ஜீவனை கௌஷத⁴ம் |
ப⁴க்தாத்யந்தஹிதௌஷத⁴ம் ப⁴வப⁴யப்ரத்⁴வம்ஸனை கௌஷத⁴ம்
ஶ்ரேய꞉ப்ராப்திகரௌஷத⁴ம் பிப³ மன꞉ ஶ்ரீக்ருஷ்ணதி³வ்யௌஷத⁴ம் || 24 ||

விளக்கம்:

ஓ மனமே! மயக்கங்களைத் தெளிவிக்கும் மருந்தும் முனிவர்களின் மனப்போக்கை இயக்கவைக்கும் மருந்தும் அரக்கர் தலைவருக்கு இன்னலளிக்கும் மருந்தும் மூவுலகங்களுக்கும் பிழைப்பிக்கும் சிறந்த மருந்தும் பக்தர்களுக்கு மிக்க இதமான மருந்தும் ஸம்ஸார பயத்தை அழிக்கும் சிறந்த மருந்தும் நன்மைகளை அடைவிக்கும் மருந்துமான ஸ்ரீகிருஷ்ணன் என்னும் திவ்யமான ஒளஷதத்தை பருகுவாயாக.