முகுந்த மாலா 34 | Mukunda Mala Stotram 34 in Tamil with Meaning
தத்த்வம் ப்ரஸீத³ ப⁴க³வன் குரு மய்யனாதே²
விஷ்ணோ க்ருபாம் பரமகாருணிக꞉ கி²ல த்வம் |
ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³ன-
முத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோ(அ)ஸி || 34 ||
விளக்கம்:
ஹே விஷ்ணுபகவானே! முடிவில்லாதவனே! ஹரியே நீ புருஷர்களில் சிறந்தவனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கிறாய் அன்றே. அப்படிப்பட்ட நீ அருள்புரிவாயாக பிறவிக்கடலில் மூழ்கியவனும் ஏழையுமான என்னை கரையேற்றுவதற்கு தகுந்தவனாக இருக்கிறாய்.