Thulasi Mantra in Tamil – துளசி செடியை வலம் வரும் போதும், பறிக்கும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது மிக அற்புதமான பலனை தரும்.

துளசியின் அருமை பெருமைகளை சொல்லித்தான், அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. துளசியின் மகத்துவமும், புனிதத் தன்மையும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த காலங்களில் துளசி இலைகளை காதுக்குப்பின்னால் வைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த காலத்தில் இதை யாராவது செய்தால், பார்ப்பவர்கள் கட்டாயம் கைகூப்பி சிரிக்கத்தான் செய்வார்கள். சிரிப்பவர்களுக்கு தெரியுமா? மனிதனுடைய உடலில் அதிகமான உறிஞ்சும் சக்தியானது காதுக்கு பின்பக்கம் தான் உள்ளது என்பது! இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

துளசியில் மருத்துவ குணம் ஏராளமாக அடங்கி உள்ளது. இந்த மருத்துவ குணம் நம் உடலுக்குள் ஊடுருவி செல்ல வேண்டுமென்றால் துளசியை காதுக்கு பின்னால் வைப்பது மிகவும் நல்லதொரு முறை. இது தெரியாமல், காதுக்கு பின்னால் துளசி வைப்பவரை பார்த்து ‘காதுக்குப் பின்னால் பூ வைப்பவர் என்று ஏளனமாக சில பேர் பேசுவார்கள்’. நம் முன்னோர்கள் செய்த எந்த ஒரு காரியத்தையும் தவறு என்று, போன போக்கில் சொல்லி விட கூடாது. என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த பதிவு.

சூரிய ஒளி விழுகின்ற இடத்தில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்ட வேண்டும் என்பது ஆச்சாரியரின் போதனை. நம்முடைய வீட்டைவிட தாழ்ந்த மட்டத்தில் இல்லாமல், சற்று உயரமான அளவில் துளசி செடியை அமைத்துக்கொள்வது மிகச் சிறப்பான ஒன்று.

துளசிச் செடியை வீட்டில் வைத்து விட்டால் மட்டும் போதுமா? தினம்தோறும் மூன்று முறை வலம் வர வேண்டும். தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வலம் வரும்போது எந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலனைத் தரும்.

துளசியை வலம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
‘பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்’

சுவாமிக்கு சூட்டுவதற்காக துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
‘துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே’

மாலை நேரத்திலும், ஏகாதேசி அன்றும், செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும், துளசி இலைகளை தயவுசெய்து பழிக்காதீர்கள். சாஸ்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்களை மீறுவது நமக்கு அவ்வளவு சரி அல்ல. காரண காரியங்கள் இல்லாமல் நம் முன்னோர்கள் எதையும் சொல்லவில்லை என்பதை திரும்பத் திரும்ப நம் மனதில் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் நல்லது.