Spiritual Calendar for a Week 21-11-17 to 27-11-17

19 total views, 3 views today

21-ந்தேதி (செவ்வாய்) :

  • ரம்பா திருதியை.
  • கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (புதன்) :

  • சதுர்த்தி விரதம்.
  • திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் ரத உற்சவம்.
  • திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
  • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
  • கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (வியாழன்) :

  • முகூர்த்த நாள்.
  • திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
  • திருவண்ணாமலை அருணா சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா, இரவு அதிகார நந்தியில் சுவாமியும், அன்னவாகனத்தில் அம்பாளும் பவனி வருதல்.
  • பழனி மலை முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
  • மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (வெள்ளி) :

  • முகூர்த்த நாள்.
  • சஷ்டி விரதம்.
  • திருவோண விரதம்.
  • திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
  • திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் ஆலயத்தில் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் இறைவன் வீதி உலா.
  • உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
  • மேல்நோக்கு நாள்.

25-ந்தேதி (சனி) :

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா, இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன
    வாகனத்திலும் பவனி.
  • சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி வரும் காட்சி.
  • பழனி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
  • திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
  • மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (ஞாயிறு) :

  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
  • பழனி பாலதண்டாயுதபாணி புறப்பாடு கண்டருளல்.
  • திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அன்ன வாகனத்தில் பவனி வருதல்.
  • திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் காலை சேஷ வாகனத்தில் இறைவன் வலம் வருதல், இரவு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும்,
    காமதேனு வாகனத்தில் அம்மனும் பவனி வரும் காட்சி.
  • மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (திங்கள்) :

  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை விருட்ச வாகனத்திலும், இரவு பெரிய விருட்ச வாகனத்திலும் வீதி உலா.
  • திருவெண்காடு, திருக்கழுக் குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
  • திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொலு தர்பார் காட்சி.
    மேல்நோக்கு நாள்.
Please follow and like us: