Navarathri Recipes – Kollu Sundal

 1,071 total views,  4 views today

கொள்ளு சுண்டல்

என்னென்ன தேவை?



துளைகட்டிய கொள்ளு-ஒரு கப்,
காய்ந்த மிளகாய்-2, 
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்-தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன், 
கறிவேப்பில்லை- சிறிதளவு, 
தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன், 
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த  மிளகாய், இஞ்சித் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவல் தூவி  இறக்கவும்