Navarathri Recipes – Mixd Veg sundal

 1,208 total views,  4 views today

மிக்ஸ்டு வெஜ் சுண்டல்

என்னென்ன தேவை? 

முளைகட்டிய ஏதேனும் ஒரு பயறு- ஒரு கப்,
கேரட்-ஒன்று(துருவிக் கொள்ளவும்), 
வெள்ளரித் துண்டுகள்-கால் கப் , 
வேக வைத்த உருளைகிழங்கு துண்டுகள்-கால் கப் 
தக்காளி-ஒன்று(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) பச்சை மிளகாய் விழுது-2 டீஸ்பூன், 
சீரகத்தூள்-ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பில்லை-சிறிதளவு, 
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.

எப்படி செய்வது?

முளைகட்டிய பயறை ஆவியில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பில்லை தாளித்து, காய்கறிகளை சேர்த்துக்  கலக்கவும். இதனுடன் வேக வைத்த பயறு, உப்பு, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள் நேர்த்து நன்கு கலக்கவும். சத்துகள் மிகுந்த வெஜ் சுண்டல் ரெடி!