Navarathri Recipes – Sivappu Rajma Sundal

 1,370 total views,  6 views today

சிவப்பு ராஜ்மா சுண்டல்

என்னென்ன தேவை? 

சிவப்பு ராஜ்மா-ஒரு கப், 
கடுகு, சீரகம்-தலா கால் டீஸ்பூன், 
கறிவேப்பில்லை- சிறிதளவு, 
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன், 
எண்ணெய்,உப்பு-தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க: 

காய்ந்த மிளகாய்-3, 
தனியா- கால் டீஸ்பூன், சோம்பு-கால் டீஸ்பூன், 
பட்டை-சிறிய துண்டு.

எப்படி செய்வது?

ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வறுத்துப் பொடிக்க வேண்டியதை வெறும் வாணலியில் வறுத்துப்  பொடிக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பில்லை தாளித்து வெந்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன்  செய்து வைத்துள்ள பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.