Diwali Recipes – Carrot Payasam

கேரட் பாயாசம்

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)

வெள்ளம் – கால் கப்

தண்ணீர் – தேவையான அளவு

தேங்காய் பால் – ஒரு கப்

ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – இரண்டு டீஸ்பூன்

முந்திரி – பத்து

திராட்சை – ஐந்து

செய்முறை

* கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

* பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.