கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள் | If God Goddess Temples appears in Dream

கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன்கள் | If God Goddess Temples appears in Dream

நம் வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. நம்முடைய தேவையற்ற சிந்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு, நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும், இறைவனை மட்டும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு அந்த கடவுள் அவர்களுடைய கனவில் காட்சி தருகின்றார். அவ்வாறு கடவுள் நம் கனவுகளில் வந்தால் நடக்கப்போகும் சம்பவங்களை முக்கூட்டியே தெரிவிக்கப்போகிறது என்று கூறுவார்கள். அப்படி கனவுகளில் தெய்வங்கள் வந்தால் என்னென்ன அறிகுறி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

விநாயகரை கனவில் கண்டால்

விநாயகரை கனவில் கண்டால் உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விட்டது என அர்த்தம்.

முருகனை கனவில் கண்டால்

முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான தோஷமும் நீங்கி விட்டது என்பது பொருள். உங்களுக்கு நடப்பவை எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

அம்மாள், அம்மன் தெய்வங்கள் கனவில் வந்தால்

அம்மாள், அம்மன் தெய்வங்கள் கனவில் வந்தால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்று அர்த்தம்.

திருநீறு பூசுவது போல கனவு வந்தால்

திருநீறு பூசுவது போல கனவு வந்தால் நல்ல ஞானம் பிறகும் என்று அர்த்தம்.

விஷ்ணு பகவானை கனவில் கண்டால்

 • விஷ்ணு பகவானை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
 • விஷ்ணு கருடன் மீது வருவது போல் கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

கோவிலுக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால்

 • கோவிலுக்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால் சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவீர்கள் என்று அர்த்தம்.

ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் மூடப்பட்டதுபோல் கனவு வந்தால்

 • ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் மூடப்பட்டதுபோல் இருந்தால் நாம் செய்து வரும் தொழில் பிரச்னை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வதுபோல் கனவு வந்தால்

 • கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வதுபோல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல் கனவு வந்தால்

 • கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல் கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

எந்த கடவுளை கனவில் கண்டாலும்

 • எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்னைகள் விலகும் அனைத்திலும் வெற்றி பெரும் சக்தி உங்களுக்கு கிடைக்கும் என்று அர்த்தம்.

கோவில் கோபுரத்தை கனவில் கண்டால்

 • கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்கள் பாவங்கள் நீங்கி விட்டது என்பது பொருள்.

கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை பெற்று கொள்வது போல் கனவு வந்தால்

 • கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை பெற்று கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனக்கவலைகள் ஏற்படும்.

கோயில் தெப்பத்தை கனவில் கண்டால்

 • கோயில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

கடவுளிடம் பேசுவது போல் கனவு கண்டால்

 • கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது. இதற்கான அறிகுறி நீங்கள் பல நன்மைகள் பெற போகிறீர்கள் என அர்த்தம்.

இயேசுவை கனவில் கண்டால்

 • இயேசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
 • இயேசுவை சிலுவையில் அறைவது போல் கனவு வந்தால் துன்பம் வரும். ஆனால் அவை விரைவில் மாறி விடும்.

காளியை கனவில் கண்டால்

 • காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

கடவுள் விக்ரகத்தை கனவில் கண்டால்

 • கடவுள் விக்ரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

கோயில் மணியை கனவில் கண்டால்

 • கோயில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.
 • கோயில் மணி அடிப்பது போல் கனவு கண்டால் பொருள் வரவு உண்டாகும்.

ஐயனார் தெய்வத்தை கனவில் கண்டால்

 • ஐயனார் தெய்வத்தை கனவில் கண்டால் சகல சௌகரியமும் கிடைக்கும்.

நவகிரகங்களை கனவில் கண்டால்

 • நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக கோயிலுக்கு சென்று 9 முறை சுற்றி வர வேண்டும்.

யானையை கனவில் கண்டால்

 • யானை உங்களை துரத்துவது போல் கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் விரைவில் செய்ய வேண்டும் என்பது அர்த்தம்.
 • யானை உங்களை ஆசிர்வாதம் செய்வது போல் கனவு வந்தால் உங்களின் அனைத்து காரியமும் வெற்றியுடன் முடியும்.

மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வது போல் கனவில் வந்தால் | Mahalakshmiku Abishekam Seivathu Pol

மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன் | Mahalakshmi Kanavil Vanthal

அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் | அம்மன் சிலை கனவில் வந்தால் என்ன பலன் | Amman Kanavil Vanthal Enna Palan