ராகு காலத்தில் வீட்டில் விளக்கு ஏற்றலாமா | Rahu Kala Deepam at Home
ராகு கால பூஜை என்பது மிகவும் சக்தி வாய்ந்த பலன் மிகுந்த பூஜை ஆகும். ராகு தோஷம் உடையவர்கள், கால சர்ப்ப தோஷம் உடையவர்கள், ராகு திசை அல்லது ராகு புத்தி நடந்தாலோ இந்த ராகு கால பூஜை செய்து அம்பிகை வழிபாடு செய்வதால், ராகு பகவானின் கெடு பலன்களின் பாதிப்புகள் குறையும்.
நிறைய பேருக்கு ராகு கால பூஜை வீட்டில் செய்யலாமா என்ற சந்தேகம் உள்ளது. பொதுவாக ராகு கால பூஜையை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு நேரத்தில் அம்பாள் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது உத்தமம் ஆகும்.
கோவில் அருகில் இல்லை என்பவர்கள் அல்லது இந்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தாராளமாக வீட்டிலேயே அம்பாள் முன்பு விளக்கு ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம். அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை, ராகு கால துக்க நிவாரண அஷ்டகம் போன்றவற்றை ராகு நேரத்தில் துதிக்கலாம்.
வீட்டிலேயே ராகு கால துர்க்கை பூஜை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி கீழே உள்ள லின்கில் கொடுக்கப்பட்டு உள்ளது. லிங்கை கிளிக் செய்து ராகு கால துர்க்கை பூஜை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளுங்கள்.
Ragu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை
Rahu Kala Durga Stotram in Tamil