Divineinfoguru.com இன் முதல் வருட கோலப்போட்டி 2018
Divineinfoguru.com, தனது முதல் வருட கோலப்போட்டியை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இந்த கோலப்போட்டியில் பங்கு கொண்டு பரிசு பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆச்சர்ய மிகு பரிசுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
போட்டியின் விதிமுறைகள்:
- கோலப்போட்டி தொடங்கும் நாள்: டிசம்பர்16, 2017. முடிவடையும் நாள்: ஜனவரி 20, 2018.
- ஒருவர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவிடலாம்.
- கோலத்தின் புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
- கோலத்தை குறைந்தது 5 புகைப்படங்கள் அனைத்து கோணங்களில் இருந்தும் எடுத்து அனுப்ப வேண்டும். (ஐந்திற்கு மேற்பட்ட புகைப்படங்களையும் அனுப்பலாம்)
- நீங்கள் அனுப்பும் கோலம் வேறெந்த இணையத்தில் இருந்தும் எடுக்கப்பட்டதாக அல்லாமல் உங்களுடைய கோலமாக மட்டுமே இருக்க வேண்டும்.
- உங்கள் நண்பர்களுடைய கோலங்களையும் அவர்களுடைய சார்பாக அவர்களின் பெயரில் அனுப்பலாம்.
- கோலங்களை உங்களின் படைப்பாற்றலுக்கு ஏற்ப எந்த பொருட்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.
- நீங்கள் கோலம் போட எடுத்துக் கொண்ட நேரம், பயன்படுத்திய பொருட்கள் பற்றிய தகவல்களையும் கோலத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
- கோலங்களை divineinfoguru.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அல்லது எங்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடலாம். முகநூல் பக்க முகவரி: https://www.facebook.com/divineinfoguru
போட்டியில் பங்குகொண்டு கவர்மிகு ஆச்சரியத்தக்க பரிசுகளை வெல்லுங்கள்.